குருவிரொட்டி இணைய இதழ்

இறப்பே புரிந்த தொழிற்றுஆம் – குறள்: 977


இறப்பே புரிந்த தொழிற்றுஆம் சிறப்பும்தான்
சீர்அல் லவர்கண் படின்.
குறள்: 977

– அதிகாரம்: பெருமை, பால்: பொருள்.



கலைஞர் உரை

சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக்
கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பெருமையைத் தரும்செல்வம்; கல்வி அதிகாரம், மதிநுட்பம் முதலியவற்றின் மிகுதிதானும்; தன்னைக் கொண்டிருத்தற்குத் தகுதியில்லாத சிறியோரிடம் சேரின் ; அடக்கமின்றிச் செருக்கே மிகுந்த செயல்களைச் செய்யும் இயல்பினதாம்.



மு. வரதராசனார் உரை

சிறப்பு நிலையும் தனக்குப் பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்புமீறிய செயலை உடையதாகும்.



G.U. Pope’s Translation

Whene’er distinction lights on some unworthy head,
Then deeds of haughty insolence are bred.

Thirukkural: 977, Greatness, Wealth.