இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் – குறள்: 1054

Thiruvalluvar

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவினும் தேற்றாதார் மாட்டு. – குறள்: 1054

– அதிகாரம்: இரவு, பால்: பொருள்



கலைஞர் உரை

இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும்
நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவது
போன்ற பெருமையுடைய தாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம்மிடத்துள்ள பொருளைக் கனவிலுங் கரத்தலறியாதவரிடத்து; ஒன்றை யிரத்தலும் வறியார்க் கொன்றீதலே போலும்!



மு. வரதராசனார் உரை

உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவனிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்குக் கொடுப்பதே போன்ற சிறப்புடையது.



G.U. Pope’s Translation

Like giving alms, may even asking pleasant seem, From men who of denial never even dream.

 – Thirukkural: 1054, Mendicancy, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.