குருவிரொட்டி இணைய இதழ்

இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி – குறள்: 1068

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
Thiruvalluvar

இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி கரவுஎன்னும்
பார்தாக்க பக்கு விடும். – குறள்: 1068

– அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள்



கலைஞர் உரை

இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது,
இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து
நொறுங்கிவிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வறுமை யென்னுங் கடலைக் கடப்பதற்கு ஒருவன் ஏறிய இரப்பு என்னும் பாதுகாப்பில்லாத தோணி; வழியிலுள்ள கரத்தல் என்னும் பாறையால் தாக்கப்படும்போது பிளந்துபோம்.



மு. வரதராசனார் உரை

இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்துவிடும்.



G.U. Pope’s Translation

The fragile bark of beggary
Wrecked on denial’s rock will lie.

 – Thirukkural: 1068, The Dread of Mendicancy, Wealth



FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link