இரவுஉள்ள உள்ளம் உருகும் கரவுஉள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும். – குறள்: 1069
– அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள்
கலைஞர் உரை
இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செல்வமுண்மை யின்மையால் வேறுபட்டிருப்பினும், மாந்தப்பிறப்பினாலும் உடலுறுப்பமைதியினாலும் முற்றும் ஒத்திருக்கும் இருவருள், ஒருவன் இன்னொருவன்முன் சென்று நின்று.
மு. வரதராசனார் உரை
இரத்தலின் கொடுமையை நினைந்தால் உள்ளம் கரைந்து உருகும்; உள்ளதை ஒளிக்கும் கொடுமையை நினைந்தால், உருகுமளவும் இல்லாமல் அழியும்.
G.U. Pope’s Translation
The heart will melt away at thought of beggary;
With thought of stern repulse ’twill perish utterly.
– Thirukkural: 1069, The Dread of Mendicancy, Wealth