இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் – குறள்: 5

Thiruvalluvar

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
– குறள்: 5

– அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம்



கலைஞர் உரை

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இறைவனின் மெய்யான புகழை விரும்பினாரிடத்து, மயக்கஞ் செய்யும் நல்வினை தீவினை என்னும் இரு வினையும் இல்லாதனவாகும்.



மு. வரதராசனார் உரை

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.



G.U. Pope’s Translation

The men, ‘who on the ”King’s’ true praised delight to dwell,
Affects not them the fruit of deeds done ill or well.

 – Thirukkural: 5, The Praise of God, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.