இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதுஆம் தூது. – குறள்: 690
– அதிகாரம்: தூது, பால்: பொருள்
கலைஞர் உரை
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து
விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தான் கூறுஞ்செய்தியால் தன் உயிரிழக்க நேரினும் அஞ்சி விட்டு விடாது; தன் அரசன் சொல்லியவாறே வேற்றரசரிடம் செய்தியைச் சொல்லித் தன் அரசனுக்கு நன்மை விளைப்பவனே; சரியான தூதனாவன்.
மு. வரதராசனார் உரை
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.
G.U. Pope’s Translation
Death to the faithful one his embassy may bring; To envoy gains assured advantage for his king.
– Thirukkural: 690, The Envoy, Wealth
Be the first to comment