குருவிரொட்டி இணைய இதழ்

இவறலும் மாண்புஇறந்த மானமும் – குறள்: 432


இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
– குறள்: 432

அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

செலவிடவேண்டிய வகைக்குச் செலவிடாத கடும்பற்றுள்ளமும்; தவறான தன்மானமும்; அளவிறந்த மகிழ்ச்சியும்; அரசனுக்குக் குற்றங்களாம்.



மு. வரதராசனார் உரை

பொருள் கொடாத தன்மையும், மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பவனுக்குக் குற்றங்களாகும்.



G.U. Pope’s Translation

A niggard hand, o’erweening self-regard and mirth Unseemly, bring disgrace to men of kingly birth.

 – Thirukkural: 432, The Correction of Faults , Wealth