குருவிரொட்டி இணைய இதழ்

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு – குறள்: 353


ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து. – குறள்: 353

– அதிகாரம்: மெய் உணர்தல், பால்: அறம்



கலைஞர் உரை

ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக்
கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பல கவர்பட்ட ஐயம் நீங்கி மெய்யறிவு பெற்றார்க்கு ; தாம் இருக்கும் நிலவுலகத்தினும் வீட்டுலகம் நெருங்கியதாம்.



மு. வரதராசனார் உரை

ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகைவிட. அடையவேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.



G.U. Pope’s Translation

When doubts disperse, and mists of error roll Away, nearner is heav’n than earth to sage’s soul.

Thirukkural: 353, Knowledge of the true, Virtues