இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் – குறள்: 946

Thiruvalluvar

இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
குறள்: 946

– அதிகாரம்: மருந்து, பால்: பொருள்.



கலைஞர் உரை

அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர்
நோய்க்கு ஆளாவதும் இயற்கை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

குறைத்துண்பதன் நன்மையைப் பட்டறிவாலறிந்து அம்முறையை நெடுகலும் கடைப்பிடிப்பவனிடத்து இன்பம் நிலைத்து நிற்பதுபோல்; மிகப் பேரளவாக வுண்பவனிடத்து நோய் நிலைத்து நிற்கும்.



மு. வரதராசனார் உரை

குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலை நிற்பது போல, மிகப் பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்கும்.



G.U. Pope’s Translation

On modest temperance as pleasures pure,
So pain attends the greedy epicure.

Thirukkural: 946, Medicine, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.