இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். – குறள்: 415
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்:
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். – குறள்: 415
விளக்கம்:
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல், ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு. – குறள்: 20 – அதிகாரம்: வான்சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் எத்துணை உயர்ந்தவர்க்கும் நீரின்று [ மேலும் படிக்க …]
ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப்பேதையின் பேதையார் இல். – குறள்: 834 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்குஉணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறுநடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அடங்கியொழுகுதற் [ மேலும் படிக்க …]
உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்பாத்தியுள் நீர் சொரிந்தற்று. – குறள்: 718 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், தானே வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment