குருவிரொட்டி இணைய இதழ்

காணாதான் காட்டுவான் தான்காணான் – குறள்: 849

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு. – குறள்: 849

- அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள்

விளக்கம்

அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை   அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே  அறிவுடையவனாக்க முயற்சி செய்ய நினைக்கும் மற்றொருவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.

உதாரணப்பட விளக்கம்:

படத்தில் உள்ள சிங்கக்குட்டி, தான் வலிமைமிக்கதாக இருப்பதாக நினைத்துக் கொண்டு பெரிய சிங்கத்துடன் முட்டி மோதினாலும், அறிவு முதிர்ந்த பெரிய சிங்கம், குட்டியை திருப்பித் தாக்காமல், குட்டியின் தாக்குதலுக்கு விட்டுக் கொடுத்து, குட்டியின் நினைப்பை உண்மையாக்க முயற்சி செய்கிறது. அதுபோல, அறிவுடையவன், அறிவற்றவனை அறிவாளியாக்க, தான் அறிவற்றவன் போலக் காட்டிக் கொள்வான்.