கடாஅ உருவொடு கண்அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று. – குறள்: 585
– அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள்
கலைஞர் உரை
சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப்
பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒற்றப்பட்டார் கண்டால் அயிர்க்கப்படாத வடிவொடு பொருந்தி ; அவர் ஒருகால் அயிர்த்து நோக்கி ஆராயத்தொடங்கின் , அவர் சினத்து நோக்கும் நோக்கிற்கு அஞ்சாது நின்று ; எவ்விடத்திலும் எவ்வழியைக் கையாளினும் உள்ளத்திலுள்ளதை வெளியிடாமை வல்லவனே; சிறந்த ஒற்றனாவான்.
மு. வரதராசனார் உரை
ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண்பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனத்திலுள்ளதை வெளிப்படுத்தாமல், இருக்கவல்லவனே ஒற்றன் ஆவன்.
G.U. Pope’s Translation
Of unsuspected mien and all – unfearing eyes, Who let no secret out, are trusty spies.
– Thirukkural: 585, Detectives, Wealth
Be the first to comment