கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் – குறள்: 496

Thiruvalluvar

கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து. – குறள்: 496

அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் ‘தேர் கடலிலே ஓடாது’ ‘கப்பல் நிலத்தில் போகாது’ என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நிலத்தின்கண் ஓடும் வலிய சக்கரங்களுள்ள நெடுந்தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா ; கடலின்கண் ஓடும் மரக்கலங்களும் நிலத்தின்கண் ஓடமாட்டா.



மு. வரதராசனார் உரை

வலிய சக்கரங்களையுடைய பெரிய தேர்கள் கடலில் ஓடமுடியாது; கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.



G.U. Pope’s Translation

The lofty car, with mighty wheel, sails not o’er watery main, The boast that skims the sea, runs not on earth’s hard plain.

 – Thirukkural: 496, Knowing the Place, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.