குருவிரொட்டி இணைய இதழ்

கடன் என்ப நல்லவை எல்லாம் – குறள்: 981


கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
– குறள்: 981

– அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இது நமது கடமையென் றறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்வினைகளெல்லாம் செய்யப்பட வேண்டிய கடமையாகும் என்று கூறுவர் அறிஞர்.



மு. வரதராசனார் உரை

கடமை இவை என்று அறிந்து சான்றாண்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.



G.U. Pope’s Translation

All goodly things are duties to the men, they say,
Who set themselves to walk in virtue’s perfect way.

 – Thirukkural: 981, Perfectness, Wealth