குருவிரொட்டி இணைய இதழ்

கதம்காத்து கற்றுஅடங்கல் ஆற்றுவான் – குறள்: 130


கதம்காத்து கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
– குறள்: 130

– அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

கற்பவை கற்று, சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

செவ்வியாவது ஒருவரைக் கண்டுரையாடுதற் கேற்ற இனிய மனநிலை . செவ்வையான நிலை செவ்வி . அறத்தெய்வம் அவனைக் கண்டு பாராட்டி மகிழ்தற்குச் சமயம் பார்க்கும் என்றது , அந்த அளவிற்கு அவன் அடக்கமுடைமையிற் சிறந்தவன் என்பதை உணர்த்தற்கு. ” நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை ” (தொல் . 857)



மு. வரதராசனார் உரை

சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.



G.U. Pope’s Translation

Rev. Dr. G.U.Pope Translations
Who learns restraint, and guards his soul from wrath, Virtue, a timely aid, attends his path.

 – Thirukkural: 130, The Possession of Self-restraint, Virtues