குருவிரொட்டி இணைய இதழ்

கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு – குறள்: 658


கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.
– குறள்: 658

– அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல்
செய்பவர்களுக்கு ஒருவேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறநூலார் விலக்கிய வினைகளைத் தாமும் விலக்கி விட்டுவிடாமல் பொருள் நோக்கிச்செய்த அமைச்சர்க்கு; அவ்வினைகள் ஒருகால் முடிந்தாலும் அவை தூயவல்லாமையால் பின்பு துன்பத்தையே விளைக்கும்.



மு. வரதராசனார் உரை

ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கி விடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கு, அச் செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.



G.U. Pope’s Translation

To those who hate reproof and do forbidden thing, What prospers now, in after days shall anguish bring.

 – Thirukkural: 658, Purity in Action, Wealth