கடிதுஓச்சி மெல்ல எறிக – குறள்: 562

Thiruvalluvar

கடிதுஓச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
– குறள்: 562

– அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித்,
தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான்
தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஆட்சிச் செல்வம் தங்களிடம் நெடுங்காலம் நிற்றலை விரும்பும் அரசர்; குற்றவாளியைத் தண்டிக்கும் போது தண்டனையைக் கடுமையாகக் காட்டி ; மென்மையாகச் செய்க.



மு. வரதராசனார் உரை

ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும்போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி, அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.



G.U. Pope’s Translation

For length of days with still increasing joys on Heav’n who call, Should raise the rod with brow severe, but let it gently fall.

 – Thirukkural: 562, Absence of Terrorism, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.