கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம். – குறள்: 567
– அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள்
கலைஞர் உரை
கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பொறுக்கத்தகாத கடுஞ்சொல்லும் குற்றத்தின் அளவிற்கு மிஞ்சிய தண்டனையும் ; அரசனது பகையை வெல்லுதற்கேற்ற வலிமையாகிய இரும்பைத் தேய்த்தழிக்கும் அரமாம்.
மு. வரதராசனார் உரை
கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.
G.U. Pope’s Translation
Harsh words and punishments severe beyond the right, Are file that wears away the monarch’s conquering might.
– Thirukkural: 567, Absence of Terrorism, Wealth
Be the first to comment