
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுஅல்லது
இல்லை நிலக்குப் பொறை. – குறள்: 570
– அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள்
கலைஞர் உரை
கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்குப் பக்க பலமாக்கிக் கொள்ளும், அதைப்போல் பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கொடுங்கோலரசன் அறநூலும் அரசியல் நூலுங் கல்லாதாரைத் தனக்கு ஆள்வினைத்துணைவராகச் சேர்த்துக்கொள்வான் ; அக்கூட்டமல்லாது நிலத்திற்கு வேறு கனமான பொறை (பாரம்)இல்லை.
மு. வரதராசனார் உரை
கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக்கொள்ளும்; அது தவிர நிலத்திற்குச் சுமை வேறு இல்லை.
G.U. Pope’s Translation
Tyrants with fools their counsels share;
Earth can no heavier burthen bear!
– Thirukkural: 570, Absence of Terrorism, Wealth
Be the first to comment