குருவிரொட்டி இணைய இதழ்

கல்லாதான் ஒட்பம் கழியநன்று – குறள்: 404

கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவு உடையார். – குறள்: 404

அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள்

கலைஞர் உரை

கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட,
அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கல்லாதவனுக்கு ஒரோவழி தற்செயலாகத்தோன்றும் உயரிய கருத்து மிகச் சிறந்ததாயினும்; அறிவுடையார் அவனைப் பாராட்டுமளவில் அதை உயர்வாகக் கொள்ளார்.

மு. வரதராசனார் உரை

கல்லாதவனுக்கு ஒரோவழி தற்செயலாகத்தோன்றும் உயரிய கருத்து மிகச் சிறந்ததாயினும்; அறிவுடையார் அவனைப் பாராட்டுமளவில் அதை உயர்வாகக் கொள்ளார்.

G.U. Pope’s Translation

From blockheads’ lips, when words of wisdom glibly flow, The wise receive them not , though good they seem to show.

 – Thirukkural: 404, Ignorance, Wealth