கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின். – குறள்: 403
– அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள்
கலைஞர் உரை
கற்றவர்களின், முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தம் அறிவின்மையையும் தகுதியின்மையையும் உணர்ந்து, கற்றோரவையின் கண் உரைநிகழ்த்தும் வகையில் தாம் ஒன்றுஞ் சொல்லாது முழு அடக்கமாயிருப்பராயின்; கல்லாத வரும் மிக நல்லவரேயாவர்.
மு. வரதராசனார் உரை
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப்பெற்றால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவர்.
G.U. Pope’s Translation
The blockheads too, may men of worth appear,
If they can keep from speaking where the learned hear!
– Thirukkural: 403, Ignorance, Wealth