கான முயல்எய்த அம்பினில் – குறள்: 772

Thiruvalluvar

கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
– குறள்: 772

– அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள்



கலைஞர் உரை

வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி தப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

காட்டிலோடும் முயலின்மேல் தப்பாது எய்த அம்பை ஏந்துவதிலும்; திறந்த வெளியில் நின்ற யானைமே லெறிந்து தப்பிய வேலைப் பிடித்திருத்தல் பெருமை தருவதாம்.



மு. வரதராசனார் உரை

காட்டில் ஓடும் முயலை நோக்கிக் குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்டவெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.



G.U. Pope’s Translation

Who aims at elephant, though dart should fail, has greater praise,
Than he who woodland hare with winged arrow slays.

 – Thirukkural: 772, Military Spirit, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.