கண்ணோட்டத்து உள்ளது உலகியல் – குறள்: 572

Thiruvalluvar

கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதுஇலார்
உண்மை நிலக்குப் பொறை.
– குறள்: 572

– அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள்



கலைஞர் உரை

அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உலக நடை கண்ணோட்டத்தினால் நடைபெற்று வருகின்றது; ஆதலால் , அக்கண்ணோட்டம் இல்லாதார் இவ்வுலகத்திலிருப்பது மாநிலத்திற்கு வீண்சுமையேயன்றி ஒரு பயனுமில்லாததாம்.



மு. வரதராசனார் உரை

கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது; கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருந்தால் நிலத்திற்குச் சுமையே தவிர, வேறு பயனில்லை.



G.U. Pope’s Translation

The world goes on its wonted way, since grace benign is there;
All other men are burthen for the earth to bear.

 – Thirukkural: 572, Benignity, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.