கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டுஇவ் வுலகு. குறள்: 571
– அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள்
கலைஞர் உரை
இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கண்ணோட்டம் என்று சொல்லப்படும் மிகச் சிறந்த அழகு பண்புடையாரிடத்தில் இருப்பதனாலேயே, இவ்வுலகம் அழியாது இருந்து வருகின்றது.
மு. வரதராசனார் உரை
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால்தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.
G.U. Pope‘s Translation
Since true benignity, that grace exceeding great, resides
In kingly souls, world in happy state abides.
– Thirukkural: 571, Benignity, Wealth