குருவிரொட்டி இணைய இதழ்

இரப்பான் வெகுளாமை வேண்டும் – குறள்: 1060


இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்புஇடும்பை
தானேயும் சாலும் கரி. – குறள்: 1060

– அதிகாரம்: இரவு, பால்: பொருள்



கலைஞர் உரை

இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக் கூடாது.
தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இரக்கப்பட்டவன் இரந்த பொருளை ஈயாவிடத்து இரந்தவன் சினங்கொள்ளாதிருத்தல் வேண்டும்; முற்பிறப்பில் தானும் தன்னை இரந்தார்க்கு ஈயவில்லை என்பதற்குத் தன் வறுமைத் துன்பமே போதிய சான்றாம்,



மு. வரதராசனார் உரை

இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும்; அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.



G.U. Pope’s Translation

Askers refused from wrath must stand aloof;
The plague of poverty itself is ample proof.

 – Thirukkural: 1060, Mendicancy, Wealth