குருவிரொட்டி இணைய இதழ்

கரப்புஇடும்பை இல்லாரைக் காணின் – குறள்: 1056


கரப்புஇடும்பை இல்லாரைக் காணின் நிரப்புஇடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும். – குறள்: 1056

– அதிகாரம்: இரவு, பால்: பொருள்



கலைஞர் உரை

இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை
இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம்மிடத்துள்ளதைக் கரத்தலாகிய நோயில்லாதவரைக் கண்டால்; தன்மானத்தை விடாது இரப்போருக்கு வறுமையால் வருந்துன்பமெல்லாம் ஒருசேரத் தொலையும்.



மு. வரதராசனார் உரை

உள்ளதை ஒளிக்கும் துன்ப நிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத்துன்பம் எல்லாம் ஒருசேரக் கெடும்.



G.U. Pope’s Translation

If those you find from evil of ‘denial’ free,
At once all plague of poverty will flee.

 – Thirukkural: 1056, Mendicancy, Wealth