கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. – குறள்: 391
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
கலைஞர் உரை
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர்
ஒருவன் தான் கற்க வேண்டிய நூல்களைப் பிழையறக் கற்க; அங்ஙனம் கற்றபின் அதற்கேற்ப ஒழுகுதலைக் கடைப்பிடிக்க.
மு. வரதராசனார் உரை
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
G.U. Pope’s Translation
So lear that you may full and faultless learning gain, Then in obedience meet to lessons learnt remain.
– Thirukkural: 391, Learning , Wealth