குருவிரொட்டி இணைய இதழ்

கருமம் செயஒருவன் கைதூவேன் – குறள்: 1021


கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுஉடையது இல். – குறள்: 1021

– அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன்
முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தான் பிறந்தகுடியை மேன்மேலும் முன்னேற்றும் முயற்சியைக் கைவிடேன் என்னும் பெருமைபோல; சிறந்த பெருமை ஒருவனுக்கு வேறொன்று மில்லை.



மு. வரதராசனார் உரை

குடிப்பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.



G.U. Pope’s Translation

Who says ‘I’ll do my work, nor slack my hand’,
His greatness, clothed with dignity supreme, shall stand.

 – Thirukkural: 1021, The way of Maintaining the Family, Wealth