குருவிரொட்டி இணைய இதழ்

கற்றறிந்தார் கல்வி விளங்கும் – குறள்: 717



கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து. – குறள்: 717

– அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

மாசற்ற  சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வழுவின்றிச் சொற்பொழிவுகளை ஆராய வல்ல அறிஞரவைக்கண் உரை நிகழ்த்தின், பலநூல்களையும் கற்று அவற்றின் பொருளை அறிந்தவரின் கல்வி விளங்கித்தோன்றும்.



மு. வரதராசனார் உரை

குற்றமறச் செயல்களை ஆராய்வதில் வல்ல அறிஞரிடத்தில், பல நூல்களையும் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தோன்றும்.



G.U. Pope’s Translation

The learning of the learned sage shines bright, To those whose faultless skill can value it aright.

 – Thirukkural: 717, The Knowledge of the Council Chamber, Wealth