கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார். – குறள்: 935
– அதிகாரம்: சூது, பால்: பொருள்.
கலைஞர் உரை
சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்.
.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சூதாட்டும் சூதாடுகளமும் கவறுருட்டுங் கைத்திறமும் பற்றிப் பெருமை பாராட்டிப் பற்றுள்ளங்கொண்டு ஆடியவரும்; தம் எல்லாச்செல்வமும் இழந்தவராயினர்,
மு. வரதராசனார் உரை
சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆய்விடுவார்.
G.U. Pope’s Translation
The dice, and gaming-hall, and gamester’s art, they eager sought, Thirsting for gain-the men in other days who came to nought.
– Thirukkural: 935, Gambling, Wealth.