கெடல்வேண்டின் கேளாது செய்க – குறள்: 893

Thiruvalluvar

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
குறள்: 893

– அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள்.



கலைஞர் உரை

ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் தான் கேடடைவதை விரும்பினனாயின்; பிறரைக் கொல்ல விரும்பின் அப்பொழுதே கொல்லவல்ல பெரியாரிடத்துத் தவற்றை; தன் அமைச்சரின் அல்லது துணைவரின் அறிவுரையைப் பொருட்படுத்தாது செய்க.



மு. வரதராசனார் உரை

அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்துமுடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலே செய்யலாம்.



G.U. Pope’s Translation

Who ruin covet, let them shut their ears, and do despite
To those who, where they list, to ruin have the might.

Thirukkural: 893, Not Offending the Great, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.