குருவிரொட்டி இணைய இதழ்

கெடாஅர் வழிவந்த கேண்மையார் – குறள்: 809


கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.
– குறள்: 809

– அதிகாரம்: பழைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல்
இருப்பவரை உலகம் போற்றும்.

.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உரிமை கெடாது பழைமையாக வந்த நட்பையுடையாரின் உறவை, அவர் செய்த தவறு பற்றி விடாதவரை; உலகு விழையும் – உலகம் விரும்பும்.



மு. வரதராசனார் உரை

உரிமை கெடாமல் தொன்றுதொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.



G.U. Pope’s Translation

Friendship of old and faithful friends,
Who ne’er forsake, the world commends.

Thirukkural: 809, Familiarity, Wealth