கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவுஓரீஇ அல்ல செயின். – குறள்: 116
– அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம்
கலைஞர் உரை
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்துவிடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரிய வேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவன் தன் மனம் நடுநிலை திறம்பித் தீயவற்றைச் செய்யக் கருதுமாயின்; அக்கருத்தையே தன் கேட்டை முன்னறிவிக்குந் தீக்குறியாகக் கொண்டு , ” நான் இனிக்கேடடைவேன் , ” என்று திட்டமாய் அறிந்து கொள்க.
மு. வரதராசனார் உரை
தன் நெஞ்சம் நடுவுநிலைமை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், `நான் கெடப்போகின்றேன்’ என்று ஒருவன் அறிய வேண்டும்.
G.U. Pope’s Translation
If, right deserting, heart to evil turn,
Let man impending ruin’s sign discern!
– Thirukkural: 116,Impartiality, Virtues
Be the first to comment