கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. – குறள்: 418
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
கலைஞர் உரை
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை
நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள்; கேட்பினும் கேளாத் தகையவே தம் புலனுக்கேற்ப ஓசையொலிகளைக் கேட்குமாயினும் செவிடாந் தன்மையனவே.
மு. வரதராசனார் உரை
கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள், (இயற்கையான துளைகள் கொண்டு ஒசையைக்) கேட்டறிந்தலும், கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
G.U. Pope’s Translation
Where teaching hath not oped the learner’s ear,
The man may listen, but he scarce can hear.
– Thirukkural: 418, Hearing, Wealth
Be the first to comment