கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதுஓர் கோல். – குறள்: 796
– அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால்
கலைஞர் உரை
தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான்
நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தீமையாக எல்லாராலுங் கருதப்படும் கேட்டிலும் ஒரு நன்மை யுண்டாம்; அது என்னவெனின், அக்கேடேதன் நண்பரெல்லாரின் அன்பையும் நன்றாக அளந்தறிய வுதவும் ஓர் அளவுகோல் என்பதாம்.
மு. வரதராசனார் உரை
கேடு வந்தபோதும் ஒருவகை நன்மை உண்டு; அக்கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும்.
G.U. Pope’s Translation
Ruin itself one blessing lends:
‘Tis staff that measures out one’s friends.
– Thirukkural: 796, Investigation formatting Friendships, Wealth