குருவிரொட்டி இணைய இதழ்

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு – குறள்: 1005


கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடி உண்டாயினும் இல்.
குறள்: 1005

– அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள்



கலைஞர் உரை

கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறருக்கீவதும் தாம் நுகர்வது மாகிய இரண்டுமில்லாதவருக்கு; கோடிக் கணக்கான செல்வமிருப்பினும் அது செல்வமிருப்பதாகாது.



மு. வரதராசனார் உரை

பிறர்க்குக் கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன்மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.



G.U. Pope’s Translation

Amid accumulated millions they are poor,
Who nothing give and nought enjoy of all they store.

 – Thirukkural: 1005, Wealth without Benefaction, Wealth