குருவிரொட்டி இணைய இதழ்

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் – குறள்: 525


கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
– குறள்: 525

– அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள்



கலைஞர் உரை

வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை
அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் தன் உறவினத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொற் சொல்லுதலையும் ஆற்ற வல்லனாயின் ; அவன் ஒன்றோடொன்றாகத் தொடர்ந்த பலவகை யுறவினத்தாற் சூழப்படுவான்.



மு. வரதராசனார் உரை

பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்ய வல்லவனானால், ஒருவன் தொடர்ந்த பல சுற்றத்தால் சூழப்படுவான்.



G.U. Pope’s Translation

Who knows the use of pleasant words, and liberal gifts can give, Connections, heaps of them, surroundings him shall live.

 – Thirukkural: 525, Cherishing one’s kindred, Wealth