கொலைமேற்கொண் டாரின் கொடிதே – குறள்: 551

Thiruvalluvar

கொலைமேற்கொண் டாரின் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்துஒழுகும் வேந்து.
– குறள்: 551

– அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத்
தொழிலகாக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அலை மேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும் . பொருளாசையாற் குடிகளை வருத்துந் தொழிலை மேற்கொண்டு முறையல்லாதவற்றைச் செய்தொழுகும் வேந்தன் ; பகைமையினாற் கொல்லுதல் தொழிலை மேற்கொண் டொழுகுவாரினுங் கொடியனேயாவன் ..



மு. வரதராசனார் உரை

குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரைவிடக் கொடியவன்..



G.U. Pope’s Translation

Than one who plies the murderer’s trade, more cruel is the king
who all injustice works, his subjects harassing.

 – Thirukkural: 551, The Cruel Sceptre, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.