கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். – குறள்: 550
– அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள்
கலைஞர் உரை
கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு
தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அரசன் கொடியவரைக் கொலையால் தண்டித்து நல்லோரைக் காத்தல் ; உழவன் களைகளைக் களைந்து பசும்பயிர்களைக் காத்தலோ டொக்கும்.
மு. வரதராசனார் உரை
கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைக் களைவதற்கு நிகரான செயலாகும்.
G.U. Pope’s Translation
By punishment of death the cruel to restrain, Is as when farmer frees from weeds the tender grain.
– Thirukkural: 550, The Right Sceptre, Wealth