கொளப்பட்டேம் என்றுஎண்ணி கொள்ளாத – குறள்: 699

Thiruvalluvar

கொளப்பட்டேம் என்றுஎண்ணி கொள்ளாத செய்யார்
துளக்குஅற்ற காட்சி யவர்.
– குறள்: 699

– அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள்



கலைஞர் உரை

ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில்,
ஏற்றுக்கொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நிலைத்த உறுதியான அறிவினையுடையார்; யாம் அரசனால் மதிப்பாக ஏற்றுக்கொள்ளப் பட்டேம் என்று கருதித் தம் நிலைமையொடு பொருந்தாதவற்றைச் செய்யார்.



மு. வரதராசனார் உரை

அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர், யாம் அரசரால் விரும்பப்பட்டோம்` என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.



G.U. Pope’s Translation

‘We’ve gained his grace, boots nought what graceless acts we do’,
So deem not sages who the changeless vision view.

 – Thirukkural: 699, Conduct in Persence of the King, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.