கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. – குறள்: 9
– அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம்
கலைஞர் உரை
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ, அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
எண்வகைப்பட்ட குணங்களையுடைய இறைவனின் திருவடிகளை வணங்காத தலைகள், தத்தம் புலன்களைக் கொள்ளாத பொறிகளைப்போல பயன் படாதனவாம்.
மு. வரதராசனார் உரை
கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
G.U. Pope’s Translation
Before His Foot, ‘the Eight-fold Excellence,‘ with unbent head,
Who stands, like palsied sense, is to all living functions dead.
– Thirukkural: 9, The Praise of God, Virtues