குருவிரொட்டி இணைய இதழ்

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் – குறள்: 326

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
Thiruvalluvar

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிர்உண்ணும் கூற்று. – குறள்: 326

– அதிகாரம்: கொல்லாமை, பால்: அறம்



கலைஞர் உரை

கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின்
பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்.உயிரைக் கவரும் கூற்றுவன் செல்லமாட்டான்.



மு. வரதராசனார் உரை

கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின்மேல், உயிரைக் கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.



G.U. Pope’s Translation

Ev’n death, that life devours, their happy days shall spare, Who law, ‘Thou shall not kill,’ uphold with reverent care.

 – Thirukkural: 326, Not Killing, Virtues



FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link