
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும். – குறள்: 260
– அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம்
கலைஞர் உரை
புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக்
கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஓருயிரையுங் கொல்லாதவனாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா மக்களும் கைகுவித்து வணங்குவர்.
மு. வரதராசனார் உரை
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
G.U. Pope’s Translation
Who slays nought – flesh rejects – his feet before,
All living things with clasped hands adore.
– Thirukkural: 260, The Renunciation of Flesh, Virtues
Be the first to comment