கொன்றன்ன இன்னா செயினும் – குறள்: 109

Thiruvalluvar

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றும்நன்று உள்ள கெடும்.
– குறள்: 109

– அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம்



கலைஞர் உரை

ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தமக்கு முன் பொருகால் ஒரு நன்மை செய்தவர் பின்பு கொன்றாற் போன்றபெருந் தீமைகளைச் செய்தாராயினும், அவையெல்லாம் அவர் செய்த நன்மை யொன்றையே நினைத்த மட்டில் நன்றியறிவுடையார் மனத்தில் இல்லாமல் மறைந்துபோம்.



மு. வரதராசனார் உரை

முன் செய்த உதவி செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.



G.U. Pope’s Translation

Effaced straightway is deadliest injury,
By thought of one kind act in days gone by.

 – Thirukkural: 109, The Knowledge of Benefits Conferred : Gratitude, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.