குருவிரொட்டி இணைய இதழ்

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே – குறள்: 332


கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
– குறள்: 332

– அதிகாரம்: நிலையாமை, பால்: அறம்



கலைஞர் உரை

சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனுக்குப் பெருஞ்செல்வஞ் சேர்வது ஆடலரங்கிற்குக் காண்போர் கூட்டம் வந்து கூடுவது போன்றதே; அச்செல்வங் கெடுவதும் அவ்வாடல் முடிந்தபின் அக்கூட்டங் கலைவது போன்றதே.



மு. வரதராசனார் உரை

பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடுமிடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது; அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.



G.U. Pope’s Translation

As crowds round dancers fill the hall, is wealth’s increase;
It’s loss, as throngs dispersing, when the dances cease.

 – Thirukkural: 332, Instability, Virtues