கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி – குறள்: 765

Thiruvalluvar

கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.
– குறள்: 765

– அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள்



கலைஞர் உரை

உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல்
ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற
பெயர் பொருந்தும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இறப்புத் தெய்வமாகிய கூற்றுவனே சினந்து வந்து தாக்கினும்; கலையாது எதிர்த்து நின்று பொரும் வலிமையுடையதே; சிறந்த படையாவது.



மு. வரதராசனார் உரை

எமனே சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும், ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே படையாகும்.



G.U. Pope’s Translation

That is a ‘host’ that joins its ranks, and mightily with stands,
Though death with sudden wrath should fall upon its bands.

 – Thirukkural: 765, The Excellence of an Army, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.