குருவிரொட்டி இணைய இதழ்

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் – குறள்: 1023


குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்று தான்முந் துறும்
– குறள்: 1023

– அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது
உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின்
ஆற்றல்கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

என் குடியை மேன்மேலுயர்த்தக் கடவேன் என்னும் பூட்கைகொண்டு, அதற்கேற்ற முயற்சியைச் செய்யும் ஒருவனுக்கு; உதவி செய்யும் பொருட்டுத் தெய்வமும் தன் ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு அவனுக்கு முன் வந்து நிற்கும்.



மு. வரதராசனார் உரை

என் குடியை உயரச்செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையை இறுகக் கட்டிக் கொண்டு தானே முன்வந்து துணை செய்யும்.



G.U. Pope’s Translation

‘I’II make my race renowned’, if man shall say,
With vest succinct the goddess leads the way.

 – Thirukkural: 1023, The way of Maintaining the Family, Wealth