குலம்சுடும் கொள்கை பிழைப்பின் நலம்சுடும்
நாண்இன்மை நின்றக் கடை. – குறள்: 1019
– அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள்
கலைஞர் உரை
கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும்.
அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவன் தன் கொள்கை தவறி யொழுகின் , அத்தவறு அவன் குடிப்பிறப்பை மட்டும் கெடுக்கும்; ஆயின் , ஒருவனிடத்து நாணின்மை நிலைத்து நின்றவிடத்தோ , அந்நிலைப்பு அவன் நலம் எல்லாவற்றையுங் கெடுத்துவிடும்.
மு. வரதராசனார் உரை
ஒருவன் கொள்கை தவறினால், அத் தவறு அவனுடைய குடிப்பிறப்பைக் கெடுக்கும். நாணில்லாத தன்மை நிலை பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.
G.U. Pope’s Translation
‘Twill race consume if right observance fail;
‘Twill every good consume if shamelessness prevail.
– Thirukkural: 1019, Shame, Wealth
Be the first to comment