குறிப்பின் குறிப்புஉணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல். – குறள்: 703
– அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள்
கலைஞர் உரை
ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை
அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக்
கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ள வேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவரது முகக்குறிப்பினால் அவரது உள்ளக் குறிப்பை அறியவல்ல அமைச்சரை; அரசர் தம் பத்துறுப்புக்களுள் எதை அவர் வேண்டினுங் கொடுத்துத் தமக்குத் துணையாகக் கொள்க.
மு. வரதராசனார் உரை
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக் குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
G.U. Pope’s Translation
Who by the sign the signs interprets plain,
Give any member up his aid to gain.
– Thirukkural: 703, The Knowledge of Indication, Wealth
Be the first to comment