குருவிரொட்டி இணைய இதழ்

குற்றமே காக்க பொருளாக – குறள்: 434


குற்றமே காக்க பொருளாக குற்றமே
அற்றம் தரூஉம் பகை. – குறள்: 434

அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தனக்கு அழிவை உண்டாக்கும் பகை தன்குற்றமே; ஆதலால் தன்னிடத்துக் குற்றம் வராமையையே பொருட்டாகக் கொண்டு காத்துவருக.



மு. வரதராசனார் உரை

குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும். ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ளவேண்டும்.



G.U. Pope’s Translation

Freedom from faults is wealth; watch heedfully
‘Gainst these, for fault is fatal enmity.

 – Thirukkural: 434, The Correction of Faults , Wealth